தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த செயல்: அறையை திறந்து பார்த்து ஷாக்கான ஊழியர்

விடுதியில் 27 வயது வாலிபரும், 25 வயதுடைய ஒரு பெண்ணும் அறை எடுத்து தங்கினர்.;

Update:2025-05-31 10:38 IST

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் நகர் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 27 வயது வாலிபரும், 25 வயதுடைய ஒரு பெண்ணும் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கினர்.

இந்தநிலையில் இரவில் தங்கும் விடுதி ஊழியர், அந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, விடுதி நிர்வாகம் சார்பில் தேவிகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அறைக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.அறையை திறந்து பார்த்து ஊழியர் ஷாக்கானார். அப்போது 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடிமாலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் தமிழகத்தில் நாகப்பட்டினம் இந்திரா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் என்பதும், அந்த பெண் மயிலாடுதுறையை சேர்ந்த அவரது உறவினர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து தலா 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் உறவினர்களான இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தனர்.

இதற்காக 2 பேரும் மூணாறுக்கு வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்