வேறொருவருடன் தொடர்பு... மனைவியை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்த கணவன்

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-14 15:06 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்பா முகர்ஜி (34). இவர் அங்குள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதிய சேர்ந்த நபர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அத்துடன், அடிக்கடி அந்த நபருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இதனை அறிந்த ஷில்பாவின் கணவர் சாஹேப் முகர்ஜி (38), ஷில்பாவை பலமுறை கண்டித்துள்ளார். எனினும், அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டு அந்த நபருடன் ஷில்பா தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சாஹோப் முகர்ஜி, ஷில்பாவை கட்டையால் தலையில் அடித்ததுடன், கழுத்தை நெரித்துக் கொன்றார். இதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்