இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-07 09:06 IST


Live Updates
2025-02-07 14:28 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.1,708 கோடி, பீகாருக்கு ரூ.1,570 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.1,392 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.1,174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

2025-02-07 13:49 GMT

தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் முழுமையாக கட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

2025-02-07 13:40 GMT

மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.10-ம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-02-07 13:24 GMT

சிவகங்கையில் பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்று மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

2025-02-07 13:02 GMT

தூத்துக்குடி: கோவில்பட்டி சிட்கோ வளாகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளாது. 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-02-07 12:28 GMT

திண்டுக்கல் சரக டிஐஜி-யாக பணியாற்றி வந்த வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார். ஐபிஎஸ்ல் அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண் குமார் திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-02-07 12:07 GMT

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்கா அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2025-02-07 11:52 GMT

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் அவரது மனைவி ஹேதல் பட்டேல் ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

2025-02-07 11:46 GMT

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

2025-02-07 11:21 GMT

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்