இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் SIR
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவாதத்தை தொடங்குவார். மொத்தமாக 10 மணிநேரம் திட்டமிடப்பட்டுள்ள விவாதம் முடிந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பார். இந்த விவகாரம் குறித்து 10ம் தேதி மாநிலங்களவையில் விவாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது.
மும்பை,
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மும்பை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திரா சாவ்னி வழக்கு கிரீமிலேயர் கொள்கையை விளக்கி உள்ளது. மற்றொரு வழக்கில் பட்டியல் சமூகத்தினருக்கும் கிரீமிலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் போதுமான அளவு முன்னேறியவர்கள் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இடஒதுக்கீடு பலனை பெறக்கூடாது என கொள்கைகள் கூறுகின்றன.
இதை கூறியதற்காக எனது சொந்த சமூகத்தினரால் நான் விமர்சிக்கப்பட்டேன். இடஒதுக்கீட்டின் பலனை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாகி, கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பதவிக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பது கூட என்னை விமா்சித்தவர்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டின் தேசியப் பாட்லான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.