கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
கேளிக்கை விடுதியில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது.;
புதுடெல்லி,
கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு கோவாவின் ஆர்போரா பகுதியில் பிரிச் பை ரோமியோ லேன் என்ற இரவு கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த கேளிக்கை விடுதி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கேளிக்கை விடுதியில் தினமும் இரவு நேரங்களில் விருந்து நிகழ்சிகளில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் இங்கு விருந்தினர்கள் ஏராளமானோர் வந்து விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கலந்து கொள்வார்கள். இந்தியாவில் பல்வேறூ நகரங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. இதனால் வார இறுதி நாட்களில் அங்கு இரவில் விருந்து களைக்கட்டும்
இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான விருந்தினர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அப்போது 1 மணி அளவில் விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் அங்கு எரிந்து கொண்டிர்ந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காத வகையில் எரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
மேலும் தீ விபத்து காரணமாக கேளிக்கை விடுதி முழுவதும்பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகியும், மூச்சு திணறியும் 25 பேர் பலியாகினர். இவர்களில் 3 பேர் பெண்கள், மேலும் இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், விடுதி உரிமையாளர் மற்றும் பொது மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில்,
கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த தீவிபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இது சாதாரண விபத்து அல்ல. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட கிரிமினல் தோல்வி. விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.