முன்னாள் நீச்சல் வீராங்கனையின் தங்க பதக்கங்கள் திருட்டு

பூலா சவுத்ரி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-08-16 15:59 IST

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை பூலா சவுத்ரி கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய மூதாதையர் வீடு மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது. அந்த வீட்டில் பூலா சவுத்ரி நீச்சல் போட்டிகளின் மூலம் தனக்கு கிடைத்த பதக்கங்கள் மற்றும் நினைவு பரிசுகளை வைத்திருந்தார்.

இந்தநிலையில், சுதந்திர தின விடுமுறையான நேற்று பூலா சவுத்ரியின் சகோதரர் மிலன் சவுத்ரி, தனது சகோதரியின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டை சுத்தம் செய்ய வீட்டிற்குச் சென்றார். அப்போது பூட்டியிருந்த அந்த வீட்டின் பின்பக்க கதவு மர்மநபர்களால் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பூலா சவுத்ரியின் 6 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து பூலா சவுத்ரியின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பூலா சவுத்ரி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “எனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த அனைத்தையும் இழந்துவிட்டதாக பூலா சவுத்ரி கண்ணீர் மல்க கூறினார். மேலும் அர்ஜுனா விருது மற்றும் டென்சிங் நோர்கே பதக்கங்களை திருடர்கள் விட்டுச் சென்றதாகவும் முன்னாள் நீச்சல் வீராங்கனை பூலா சவுத்திரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்