போட்டி போட்டு 19 பீர் குடித்த ஐ.டி.ஊழியர்கள் 2 பேர் பலி
ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்கு பீர் மற்றும் மது பாட்டில்களுடன் சென்றனர்.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரான இவர் வெளியூரில் வேலை பார்த்து வந்தார். இருவரும் சங்கராந்தி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர்.
அவர்களது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க விரும்பினர். அந்த ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்கு பீர் மற்றும் மது பாட்டில்களுடன் சென்றனர். அப்போது நண்பர்களிடையே யார் அதிக பீர் குடிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இதில் மணிக்குமார் புஷ்ப - ராஜ் இருவரும் போட்டிபோட்டு பீர் குடித்தனர். மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை 19 பீர் குடித்தனர். இதனால், அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இருவரும் மயங்கி விழுந்தனர்.
உடனே நண்பர்கள், அழைத்துச் இருவரையும் பிலேரு மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே மணிக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புஷ்பராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களின் இறப்புக்கு காரணம் அதிகப்படியான மது அருந்தியதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அவர்களுடன் பீர் குடித்த மேலும் 4 பேர் ஆரோக்கியமாக உள்ளனர்.