டெல்லி கார் வெடிப்பு: காவல் ஆணையருடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-11-10 22:45 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள முக்கிய சாலையில் இன்று மாலை 6.52 மணிக்கு கார் சென்றுகொண்டிருந்தது. செங்கோட்டை சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இதில், அருகில் உள்ள கார்களும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கார் வெடிப்பில் காயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையிலேயே டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ஷா உடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அதேவேளை, இந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? , விபத்தா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்