வாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update:2025-08-16 10:34 IST

புதுடெல்லி,

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

வாஜ்பாய், 1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரைக்கும், அதன்பின் 1998-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி முதல் 2004 மே 22-ந்தேதி வரைக்கும் பிரதமராக இருந்துள்ளார். மோடி பிரதமரான பின், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்