மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி விபத்து - 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-06-04 11:50 IST

போபால்:

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஜபுவா மாவட்டம் அருகே வேன் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி வேனில் இருந்த உடல்களை மீட்டனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்