துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-03-09 11:39 IST

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான ஜகதீப் தன்கருக்கு லேசான நெஞ்சு வலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜகதீப் தன்கரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜகதீப் தன்கரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்