வாக்காளர் பட்டியல் விவகாரம்: ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் நாளை ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.;

Update:2025-08-07 21:12 IST

பெங்களூரு,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி முக்கிய உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து அவர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புக்குமாரை நேரில் சந்தித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து மனு கொடுக்கிறார். ராகுல் காந்தி மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த ஆதாரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்