கடும் பனிமூட்டம்: டெல்லியில் 228 விமானங்கள் ரத்து

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம்.;

Update:2025-12-16 17:12 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. இதனால் காலையிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர 5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்