‘தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறோம்’ - சித்தராமையா

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-23 16:53 IST

பெங்களூரு,

மேகதாது அணை தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலளித்து பேசிபோது அவர் கூறியதாவது;-

“இந்த ஆண்டு எதிர்பார்ப்பைவிட அதிக அளவில் மழைப்பொழிவு இருந்ததால் காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முடிந்தது. மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்கை கணக்கிட்டு வழங்க மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 177.25 டி.எம்.சி.யை விட கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறோம். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்