டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகள் 4 பேரின் காவல் விசாரணை மேலும் 10 நாள் நீட்டிப்பு

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-11-30 07:19 IST

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 10-ந்தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் டாக்டர்கள் முசாமில் ஷகீல், அதீல் அகமது ராதர், ஷாகீன், சயீத், முப்தோ இர்பான் அகமது வாகே ஆகிய 4 பேரும் 10 நாள் காவல் விசாரணை முடிந்து நேற்று பட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது புலனாய்வு அதிகாரிகள் காவல் விசாரணையை மேலும் நீட்டிக்க மனு தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் மேலும் 10 நாள் காவல் விசாரணைக்கு நீதிபதி அனுமதித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் அந்த 4 பேரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சம்பவத்தின் சதித்திட்டத்தில் தொடர்புடைய 4 முக்கிய நகரங்களுக்கு பயங்கரவாதிகள் அழைத்துச் செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்