டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி, அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.;

Update:2025-11-30 07:43 IST

புதுடெல்லி,

டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்தவர் ககன் ஆகி (வயது 27). ரவுடியான இவர், அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கும்பலுடன் இவருக்கு தகராறு எற்பட்டது. அது தொடர்பாக அந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் அழைப்பின் பேரில் சமரசம் பேச அந்த பகுதியில் உள்ள ஒரு இனிப்புக்கடை அருகே ககன் ஆகி சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ககன் ஆகியை நோக்கி சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்