போதை மருந்து கடத்தி வந்த பெண் கைது

போதை மருந்து கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-07-15 15:52 IST

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் லிஜியா (வயது 30). இவர் பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதை மருந்து பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலில் முக்கியமான நபர் என எர்ணாகுளம் கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் கலால்துறை அதிகாரிகள் தைக்கூடம் பகுதியில் உள்ள விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் லிஜியா விற்பனைக்காக எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதை மருந்தை கடத்தி வந்து தங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லிஜியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்