2 மணிநேரம்... எதுவும் வாங்காமல் சென்ற பெண்; காலில் விழுந்து கெஞ்சிய கடை உரிமையாளர்: வைரலான வீடியோ

கடை உரிமையாளர்களின் முயற்சி, அவர்களுடைய நேரம், அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள் என விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.;

Update:2026-01-15 12:57 IST

டேராடூன்,

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண்கள் பயன்படுத்த கூடிய கைப்பை, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைக்கு சென்ற பெண் ஒருவர் 2 மணிநேரம் சுற்றி பார்த்து விட்டு, தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என கூறி விட்டு வெளியே செல்ல முயல்கிறார்.

அதுவரை பொறுமையாக இருந்த அந்த கடையின் பெண் உரிமையாளர், ஓடி சென்று அந்த பெண் வாடிக்கையாளரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். ஏதேனும் ஒரு பொருளை வாங்கி செல்லுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.

இதனால் அதிர்ச்சியான அந்த பெண் வாடிக்கையாளர், என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார். இந்த வீடியோ வைரலானதும் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

2 மணிநேரம் அந்த பெண் வாடிக்கையாளர், கடையின் உள்ளே ஒவ்வொரு பொருளாக நின்று பார்த்து விட்டு, எதுவும் வாங்கவில்லை. இதனை குறிப்பிட்ட சிலர், கடை உரிமையாளர்களின் முயற்சி, அவர்களுடைய நேரம், அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.

கடையில் உள்ள பொருட்களை விற்க பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்? என தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வீடியோ உண்மையில்லை என்று கூறப்படுகிறது.

வீடியோவை வெளியிட்ட கன்னு தத்தா மற்றும் சிம்ரன் காம்பீர் இருவரும், இந்த வீடியோ உத்தரகாண்டின் டேராடூன் நகரில் எடுக்கப்பட்டது. அதில் இருப்பவர்கள் நாங்கள் தான் என்றும், பொழுதுபோக்கிற்கான நோக்கத்திற்காகவே வீடியோ எடுக்கப்பட்டது, வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர்கள் மற்றொரு வீடியோவில் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்