பிறந்தநாளன்று இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இளம்பெண்ணை சந்தன் மாலிக்கும், தீப்பும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.;

Update:2025-09-07 17:36 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அந்த பெண்ணின் நண்பர்களான சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகிய இருவரும், இளம்பெண்ணை தனியாக வெளியே அழைத்துச் சென்றனர்.

இதில் தீப் என்பவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரது வீடு ரெஜண்ட் பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. அங்கு இளம்பெண்ணை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நன்றாக சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து இளம்பெண் தனது வீட்டிற்கு கிளம்புவதாக கூறியபோது, இருவரும் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை சந்தன் மாலிக்கும், தீப்பும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 10.30 மணியளவில் ஒருவழியாக அங்கிருந்து தப்பிய இளம்பெண், நேராக தனது வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்