கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், அரசு ரூ.4 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-09-05 17:21 GMT

புதுச்சேரி

சிறுமி பலாத்கார வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், அரசு ரூ.4 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் என்கிற சீனு (வயது 30). கட்டிட தொழிலாளி.. இவர் கடந்த 2019-ம் ஆண்டு புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட கருணாகரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கடத்தல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்