குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு

நோணாங்குப்பம் அருகே குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.;

Update:2023-08-22 21:51 IST

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் இடையார்பாளையம் அருகே உள்ள என்.ஆர். நகரை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 44). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பம் வாய்க்கால் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது குடிபோதையில் அபிமன்னன் படுத்திருந்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அபிமன்னன் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் சுகந்தி அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்