நிலத்தடி நீரை மேம்படுத்த மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுவையில் நிலத்தடி நீரை மேம்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Update: 2023-06-21 17:33 GMT

புதுச்சேரி

புதுவையில் நிலத்தடி நீரை மேம்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நிலத்தடி நீர் மேம்பாடு

புதுவையில் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கலெக்டர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் சிவராஜன், இயக்குனர் தங்கமணி, செயற்பொறியாளர் வசந்தகுமார், துணை இயக்குனர் கார்த்திகேயன், உதவி இயக்குனர் சஞ்சீவ்குமார், நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குனர் சிவக்குமார், விஞ்ஞானிகள் தயாமலர், ராஜ்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகாரிகளுக்கு பயிற்சி

கூட்டத்தில் புதுவையின் தற்போதைய நிலத்தடி நீர் குறித்து மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. நிலத்தடி நீரின் தன்மை, தரம், கடல்நீர் உட்புகாதபடி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீரை சேகரித்து அதன் தரத்தை பராமரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசு அதிகாரிகள், நிலத்தடி நீரை மேம்படுத்தும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது, இதற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து பெறும் வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்