வேளாண்மை படிப்பில் சேர இறுதிகட்ட கலந்தாய்வு

சென்டாக் சார்பில் காரைக்கால் வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.

Update: 2023-08-29 16:46 GMT

காரைக்கால்

சென்டாக் சார்பில் காரைக்கால் பஜன்கோ வேளாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு (மாப்-அப்) நாளை மறுநாள்  (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அதாவது பிற மாநிலத்தவருக்கான சுயநிதி இடங்களுக்கான கலந்தாய்வில் 99.999 மதிப்பெண் முதல் 70 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கு பெறலாம். 10.45 மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் 69.999 முதல் 40 மதிப்பெண் வரை பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் புதுவை காமராஜர் மணிமண்டபம், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, மாகி மகாத்மாகாந்தி கலைக்கல்லூரி, ஏனாம் டாக்டர் எஸ்.ஆர்.கே. கலைக்கல்லூரியில் உள்ள அலுவலகங்களில் கலந்தாய்வு நடக்கும் 30 நிமிடத்துக்கு முன்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது விண்ணப்ப நகல், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட கலந்தாய்வு தொடர்பான சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.மேற்கண்ட தகவலை சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்