வேதபுரீஸ்வரர் கோவிலில் மகோற்சவ கொடியேற்றம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் மகோற்சவ கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-06-05 18:53 GMT

புதுச்சேரி

புதுவை காந்தி வீதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதிரிபுர சுந்தரி, வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 31-ம் ஆண்டு மகோற்சவ விழா கடந்த 26-ந் தேதி துர்க்காம்பாள் பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி மகோற்சவ கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் வருகிற 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், 13-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் ரதோற்சவமும், 14-ந் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ நடராஜர் தேரடிமிதித்தல் தீர்த்தவாரியும், ஸ்ரீசந்திரசேகரர் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

15-ந் தேதி காலை திருஞானசம்பந்தர் உற்சவமும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 16-ந் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 17-ந் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் தேவஸ்தான அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்