என்ஜினீயர் வங்கி கணக்கில் ரூ.1.28 லட்சம் மோசடி

குறுஞ்செய்தி மூலம் ‘லிங்க்’ அனுப்பி என்ஜினீயரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-25 16:33 GMT

லாஸ்பேட்டை

குறுஞ்செய்தி மூலம் 'லிங்க்' அனுப்பி என்ஜினீயரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறுஞ்செய்தி

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சூரிய நாராயணன் (வயது 29). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வந்தது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. அந்த குறுஞ்செய்தி வங்கியில் இருந்துதான் வந்ததாக நம்பிய அவர் அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்தார்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் எடுக்கப்பட்டது.

நூதன மோசடி

இதனால் அதிர்ச்சியடைந்த சூரியநாராயணன், தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு போன் செய்து தனது செல்போனுக்கு லிங்க் வந்தது மற்றும் பணம் எடுக்கப்பட்டது குறித்த விவரத்தை தெரிவித்தார்.

அப்போது வங்கி அதிகாரிகள் தரப்பில், நாங்கள் 'லிங்க்' எதுவும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூரியநாரயணன், இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஷா வழக்குப்பதிவு செய்து நூதனமாக பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்