போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தவளக்குப்பம் அடுத்த போலீஸ் நிலயைத்தில் காதல் ஜோடி தஞ்சமடைத்தனர்,

Update: 2022-08-24 15:56 GMT

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவர் சென்னை மதுராந்தகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் புஷ்பவள்ளி பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இவர் தவளக்குப்பம் அருகே புதுக்குப்பத்தில் உள்ள சாண்டியூஸ் கடற்கரையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சென்ற புஷ்பவள்ளி மீண்டும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்தநிலையில் தனது காதலன் புதுக்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமார் (32) என்பவருடன் புஷ்பவள்ளி திருமண கோலத்தில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பெண்ணின் விருப்பத்தை அறிந்த போலீசார் வாக்குமூலத்தை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டனர். அதன்பின் அந்த பெண் கணவருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்