இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம்

இளம்பெண் ஒருவரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-23 16:24 GMT

புதுச்சேரி

இளம்பெண் ஒருவரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

சைபர் கிரைம்

புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.

இதனை தடுக்க புதுவை காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவு சமீபத்தில் கோரிமேட்டில் திறக்கப்பட்டது. இங்கு சைபர் கிரைம் குற்றங்களை கண்டுப்பிடிக்க ரூ.2 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப கருவி வசதிகள் உள்ளன்.

நிர்வாண புகைப்படம்

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.. இவர் ஒருசில சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் அந்த இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்தவுடன் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அவரது போலி கணக்கை முடக்கினார்கள்.

மேலும் அவரின் பெயரில் போலி கணக்கு தொடங்கியது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்