புகையிலை பழக்கம் மீட்பு மையம் திறப்பு

சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை பழக்கம் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-04 17:12 GMT

புதுச்சேரி

சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை பழக்கம் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா இன்று நடந்தது. துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) முரளி, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி டீன் கென்னடி பாபு, சி.ஐ.ஐ. தலைவர் டாக்டர் கென்னடி பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக டாக்டர் கவிப்பிரியா வரவேற்றார். விழாவில் சேதராப்பட்டு மருத்துவ அலுவலர் டாக்டர் பாமகாள் கவிதை, டாக்டர் சூரியகுமார் மற்றும் சி.ஐ.ஐ. உறுப்பினர்கள், மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள், மாணவர்கள், சுகாதார ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து புகையிலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.

இந்த மையம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிகோடின் மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளதாகவும் சுகாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்