பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு ஆணை

சட்டம் ஏற்றுதல், சட்ட ஆலோசனை வழங்க பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு பணி ஆணைய முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்,

Update: 2022-06-08 16:29 GMT

புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் பயின்று சட்டப்படிப்பு முடித்த இளம் வக்கீல்களை ஊக்குவிக்கும் வகையில் தகுதி வாய்ந்த 10 இளம் வக்கீல்களுக்கு சட்டம் ஏற்றுத்தல் மற்றும் சட்ட ஆலோசனை வழங்க ஓராண்டு பயிற்சி சட்டத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான பயிற்சிக்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் 15 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

இவர்களில் திறமை மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயிற்சி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் நாஜீம், நேரு, கே.எஸ்.பி. ரமேஷ், சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், சார்பு செயலாளர் முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்