காரைக்காலில் தரை தட்டி நின்ற விசைப்படகு மீட்பு

காரைக்காலில் கடல் சீற்றம் காரணமாக அடித்து செல்லப்பட்ட விசைப்படகை மீனவர்கள் போராடி மீட்டனர்.

Update: 2022-11-24 16:43 GMT

காரைக்கால்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், கோட்டுச்சேரிமேடு, கீழகாசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 350 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் சிலர் தங்களது படகுகளை அருகில் உள்ள அரசலாற்றில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது வழக்கம்.

இந்தநிலையில் கீழகாசாக்குடி மேடு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகை துறைமுகத்தில் கட்டி வைத்திருந்தார்.

நேற்று அமாவாசையையொட்டி கடல் சீற்றத்துடன் காணப்பட்டடது. இதையொட்டி முறைமுகத்தில் கட்டிவைத்திருந்த விசைப்படகு கயிறு அறுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு துறைமுக முகத்துவாரத்தில் பாறாங்கல்லில் மோதி சேதமடைந்து தரை தட்டி நின்றது.

இதுகுறித்து அறிந்த மீனவர்கள் 3 விசைப்படகுகள் மூலம் பல மணி நேரம் போராடி மீட்டனர்.

படகு மீட்கப்பட்டாலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்தால் மட்டுமே மீண்டும் இயக்க முடியும் என்பதால் புதுச்சேரி அரசு நிதி உதவி செய்யவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்