ரெயில்வே கேட் பழுதால் நடுவழியில் நின்ற ரெயில்

கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2023-03-23 17:01 GMT

புதுச்சேரி

கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயில்வே கேட் பழுது

சென்னையில் காலை 6 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் 10 மணிக்கு புதுச்சேரிக்கு வந்து சேரும். இன்று காலை வழக்கம்போல் அந்த ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர். காலை 10 மணியளவில் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதிக்கு வந்தது.

இதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த ஊழியர் கேட்டை மூட முயற்சி செய்தார். ஆனால் கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அது சரியாக மூடவில்லை. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த பயணிகள் ரெயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் ரோடியர் மில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் வாகனங்களை அனைத்தையும் மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

பரபரப்பு

தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். அதன்பிறகு சிக்னல் கிடைத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து அரை மணி கழித்து ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்