தோட்டக்கலை மாணவர்களுக்கு வனத்துறையில் பயிற்சி

காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி முதலாம் ஆண்டு தோட்டக்கலை மாணவர்கள் 37 பேருக்கு மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள வனத்துறையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-29 16:27 GMT

காரைக்கால்

காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி முதலாம் ஆண்டு தோட்டக்கலை மாணவர்கள் 37 பேருக்கு மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள வனத்துறையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரியின் இணை பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் கந்தமூர்த்தி வழிகாட்டுதலில் வனத்துறை ஊழியர்கள் ஜோதி, சம்பந்தம் ஆகியோர் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இணை பேராசிரியர் டாக்டர் அனந்தகுமாரிடம் அப்பகுதி மக்கள், சாலையோரத்தில் அடிப்பட்டு கிடந்த மயில் ஒன்றை கொண்டு வந்தனர். அந்த மயிலுக்கு சிகிச்சை அளித்தும், பலனின்றி இறந்துபோனது.

Tags:    

மேலும் செய்திகள்