ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் - துரை வைகோ தகவல்

சிகிச்சைக்காக வைகோ தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு சென்றுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-26 08:11 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் வைகோ பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் வைகோ தனது வீட்டில் கீழே விழுந்து விட்டதாகவும் இதில், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் திருமண விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் சிகிச்சைக்காக வைகோ தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு சென்றுள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்