தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்கிற்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
*நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே
*நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா
*நில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்
* போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி
* கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு
* குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்
* மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்
* வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா
* கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
* சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.