16 வயது சிறுமி கர்ப்பம்: தையல் தொழிலாளி கைது

தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.;

Update:2026-01-11 09:18 IST

திருப்பூர்,

திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெற்றோர், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்யும் அரசு (வயது 19) என்பவர் சிறுமியிடம் பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசுவை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்