தூத்துக்குடியில் திருடப்பட்ட 2 பைக்குகள் மீட்பு: 2 பேர் கைது
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு ஒருவர், பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது.;
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சேர்ந்த ராகவன் மகன் ஜான் (வயது 40), கடந்த 15-ம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன்(40) மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஜான் பைக்கையும், தூத்துக்குடி டி.ஆர். தெருவை சேர்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன்(55) என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன இளஞ்சிறார் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.