21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2024-12-21 09:39 IST
Live Updates - Page 3
2024-12-21 09:25 GMT

பிரதமர் மோடி குவைத்திற்கு இன்று புறப்பட்டு சென்றுள்ளார். அவருடைய இந்த 2 நாள் பயணத்தில், குவைத்தில், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான 101 வயதுடைய மங்கள் செயின் ஹண்டாவை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.

இதுபற்றி ஹண்டா செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் இதற்கு முன்பே கூட அவரை சந்தித்து இருப்பேன் என உறுதியாக கூற முடியும் என்றார். இந்த சந்திப்பு பற்றி ஹண்டாவின் மகன் திலீப் ஹண்டா கூறும்போது, நான் குவைத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.

நாங்கள் அனைவரும் உற்சாகமடைந்து இருக்கிறோம். குறிப்பிடும்படியாக, என்னுடைய தந்தை பிரதமர் மோடியை நிறைய விரும்புகிறார். பிரதமர் மோடி, உலக அளவில் இந்தியாவை பெருமையடைய செய்து வருகிறார் என்று அவர் எப்போதும் கூறி வருவார் என்று திலீப் கூறியுள்ளார்.

2024-12-21 08:57 GMT

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி


முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


2024-12-21 08:52 GMT

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி மனம் விட்டு பேச கோர்ட்டு அறிவுறுத்தல்


ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் நீதிபதி முன் ஆஜரானநிலையில், இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரையும் மனம் விட்டு பேசும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


2024-12-21 08:48 GMT

நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


2024-12-21 07:20 GMT

மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அரசியல்சட்டத்தின் 75ம் விழா கொண்டாட்டத்தின்போது அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே அவதூறு செய்து இழிவுபடுத்திப் பேசுவது, பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024-12-21 07:17 GMT

2 நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி.

2024-12-21 06:29 GMT

லடாக்கில் உள்ள லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-12-21 06:18 GMT

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

டி.எல்.எஸ் முறைப்படி 65 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 23ம் தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்