சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து
நிர்வாக காரணங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று மாலை 3 மணிக்கு சென்னை - சிவமொகா விமானம், இரவு 8.35 மணிக்கு சென்னை - கொச்சி விமானம், இரவு 9 மணிக்கு சென்னை - கோழிக்கோடு விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானம், சிவமொகாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 3 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், நிர்வாக காரணங்கள் காரணமாகவும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.