வானில் தெரியப் போகும் அற்புதம்; 7-ந்தேதி ‘சந்திர கிரகணம்’

முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-04 21:45 IST

சென்னை,

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் இயற்கை வானியல் நிகழ்வான ‘சந்திர கிரகணம்’ தற்பொழுது மீண்டும் நடக்கவிருக்கிறது. இதன்படி வரும் 7-ந்தேதி, இரவு 9.57 மணிக்கு தொடங்கி, இரவு 1.27 வரையில் இந்த சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் திருநாவுக்கரசு அளித்த பேட்டியில், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும், அனைவரும் இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த முழு சந்திர கிரகணம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு மட்டுமே தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்