வெற்றியின் மகிழ்ச்சியை நீடிக்கவிடாத துயர சம்பவம் - பிரேமலதா வேதனை

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்;

Update:2025-06-05 15:10 IST

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

18 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, அந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காத வகையில் ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேமுதிக சார்பில் இறைவனை வேண்டி.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்