மின் வயர் அறுந்து விழுந்து விபத்து: எண்ணூர் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிப்பு
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.;
சென்னை எண்ணூர் ரெயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மின் வயர் அறுந்து விழுந்தது குறித்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் வயரை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.