ஒசூரில் விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.;

Update:2025-11-27 09:12 IST

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்து உள்ளது.

மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் 5 இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் இணைந்து தளங்கள் தொடர்பான ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்ட 5 தளங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தளங்களையும் பார்வையிட்டதாகவும், ஒவ்வொரு தளத்தின் நன்மை தீமைகளுடன் கூடிய ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாகவும் அதில் 5 தளங்களில் இருந்து 2 தளங்களை ஆய்வு செய்து, பின்னர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்பகிறது.

இந்த நிலையில், ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்