தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2025-11-27 08:31 IST

நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்