அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

முதலிடம் பிடித்த கார்த்தி என்பவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-17 18:57 IST

 மதுரை,

மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்த நிலை​யில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்றது. இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு இருந்தன. இதில் பங்​கேற்க தமிழகம் முழு​வதும் இருந்து 6,500 காளை​கள் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன.

அதில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்​கப்​பட்​டுள்​ளது. 600 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடி வாசலில் அரசு வழிகாட்டு தலின்படி தொடங்கியது. காலை முதல் விறுவிறுப்பாக நண்டைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.40 மணியளவில் நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்லது. இரண்டம் இடத்தை அபி சித்தர் என்பவர் பிடித்தார். அவருக்கு பைக் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்