நெல்லையில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

பாளையங்கோட்டை, மணிக்கூண்டு அருகே வாலிபர் ஒருவர் நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது.;

Update:2026-01-17 19:47 IST

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, மணிக்கூண்டு அருகே, பாளையங்கோட்டை ரஹ்மத்நகரை சேர்ந்த கவின் நிர்மல் ராஜேஷ் (வயது 40) என்பவர் நிறுத்தியிருந்த பைக் கடந்த 14.1.2026 அன்று காணாமல் போனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசாரை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்த முத்துமாரி மகன் மகேஷ்(25) மற்றும் படப்பைகுறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் கணேஷ்(35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பைக்கை மீட்டு, 2 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்