‘ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது ஏற்புடையது அல்ல’ - அமீர் பேட்டி

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் உதவித்திட்டங்களை ஏற்க முடியாது என அமீர் தெரிவித்தார்.;

Update:2026-01-17 19:45 IST

மதுரை,

மதுரையில் இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண இயக்குநரும், நடிகருமான அமீர் வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் உதவித்திட்டங்கள், நலத்திட்டங்கள், அறிக்கைகளை எல்லாம் நாம் ஏற்க முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது ஏற்புடையது அல்ல.

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கப்பட்டதற்கான காரணம், பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கக் கூடியவர்களாக வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது, பேருந்து செலவுக்கு பயந்து வெளியே செல்லாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்