தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் தொடங்கியது
விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.;
சென்னை,
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது.www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே விண்ணப்ப விநியோகம் தொடங்கும். எனினும், விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது .