மின்சார என்ஜின்களுக்கான அழகுப்போட்டி: ராயபுரம் மின்சார என்ஜின் பணிமனைக்கு முதல் பரிசு
போட்டியில் 16 ரெயில்வே மண்டலங்களும், 3 ரெயில்வே உற்பத்தி ஆலைகளும் பங்கேற்றன.;
சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள், வளாகம் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும், பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
திறந்த வெளி கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகாத வகையில் மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும், பாதுகாப்பாக படிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழு பொறுப்பு உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின் சுவிட்சுகள் நல்ல முறையில் செயல்படுகிறதா? என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்பட வேண்டும்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பு சேர்வதை உறுதி செய்ய வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவைகள் உள்பட கல்விசார்ந்த, கல்விசாராத செயல்பாடுகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.