கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர்.;

Update:2025-12-06 21:37 IST

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில், 2 அணு உலைகளில் தற்போது தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக 4 அணு உலைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரஷியாவின் பங்களிப்புடம் இந்த அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அணுமின் நிலையத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அணுமின் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்