ஈரோட்டில் வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தைகள் - மலைக்குன்றில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம்
மலைக்குன்றில் உள்ள பாறையின் மீது 2 சிறுத்தைகள் படுத்திருந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மாராயிபாளையம் பகுதியில் வசித்து வரும் மக்களின் கால்நடைகளை வனப்பகுதியில் இருந்து வரும் சிறுத்தைகள் வேட்டையாடி வருகின்றன. வனத்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தனர். ஆனால் கூண்டில் சிக்காமல் சிறுத்தைகள் போக்கு காட்டி வருகின்றன. இந்நிலையில் மாராயிபாளையம் மலைக் குன்றில் உள்ள பாறையின் மீது 2 சிறுத்தைகள் படுத்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கூண்டில் சிக்காத சிறுத்தைகள் மலைக்குன்றில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விரைவில் அந்த சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.